1 min read
18 அனைத்து நிலப்பரப்பு வாகனங்கள் வாங்க முடிவு !!
இந்திய தரைப்படை 18 அனைத்து நிலப்பரப்பு வாகனங்களை ஃபின்லாந்து நாட்டிடம் இருந்து வாங்க முடிவு செய்துள்ளது.
இவற்றில் 12 வாகனங்கள் லே பிராந்தியத்திலும், 6 வாகனங்கள் குஜராத்தின் கட்ச் பகுதியிலும் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.
சிறிய ரக ஆயுதங்களின் தாக்குதலை தாங்கும் திறன் கொண்ட இந்த வாகனங்கள் 10 தரைப்படை வீரர்களை சுமக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்திய எல்லை பாதுகாப்பு படை இத்தகைய அனைத்து நிலப்பரப்பு வாகனங்களை எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.