உக்ரைன் மீட்பு பணியில் இந்திய விமானப்படை சி-17 விமானங்கள் !!

  • Tamil Defense
  • March 2, 2022
  • Comments Off on உக்ரைன் மீட்பு பணியில் இந்திய விமானப்படை சி-17 விமானங்கள் !!

இந்திய பிரதமர் மோடியின் உத்தரவுபடி உக்ரைன் மீட்பு பணியில் இந்திய விமானப்படையின் சி-17 க்ளோப்மாஸ்டர் விமானங்கள் ஈடுபட உள்ளன.

ஆபரேஷன் கங்கா எனும் அந்த மீட்பு பணி திட்டதின்படி நாளை காலை ரோமேனியாவுக்கு முதலாவது விமானம் புறப்பட உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியர்களை மீட்டு வரும் கையோடு உக்ரைனுக்கு தேவையான மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளும் அனுப்பி வைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.