
இந்திய விமானப்படை மிகவும் நீண்ட காலமாக ஏவாக்ஸ் மற்றும் எரிபொருள் டேங்கர் விமானங்களை வாங்க முயன்று வருவது தெரிந்த விஷயம் தான்.
இந்த நிலையில் ஃபிரான்ஸ் நாட்டு விமானப்படைக்கு சொந்தமான ஏ330 டேங்கர் விமானங்களை குத்தகையில் வாங்கும் யோசனை முன்வைக்கப்பட்டது.
ஆனால் இப்படி குத்தகையில் எடுக்கும் விமானங்களை நம்மால் நமது தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ள உரிமை பெற்றுள்ள நிர்வாகம் அனுமதிக்காது.
ஆகவே தற்போது சிவிலியன் விமான நிறுவனங்கள் வாங்கி பயன்படுத்தாமல் நிறுத்தியுள்ள அல்லது தேவைக்கு அதிகமான ஏ330 ரக விமானங்களை இந்திய விமானப்படை தேடி வருகிறது.
இவற்றை மாற்றியமைப்பதற்கான புதிய விமானங்களை வாங்கும் செலவை விடவும் குறைவு அதே நேரத்தில் முழுவதுமாக சொந்தமாகி விடும் காரணத்தால் தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.