உக்ரைனுடைய கிழக்கு பகுதியில் உள்ள கார்கிவ் நகரம் அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும், இந்த நகரம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மேலும் இங்கு பல ஆயிரம் இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் இந்த நிலையில் போரால் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
நேற்று காலை ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உணவு வாங்க சென்ற இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார் இதனௌ தொடர்ந்து இந்திய வெளியுறவு துறை ரஷ்யாவை தொடர்பு கொண்டது.
இதன் விளைவாக கார்கிவ் மீது இன்றிரவு முழு தாக்குதல் நடத்த உள்ளதாகவும் அதற்கு முன்னர் ஆறு மணி நேரம் சிறப்பு அனுமதியை இந்திய மாணவர்கள் வெளியேற அளிப்பதாகவும் ரஷ்யா கூறி உள்ளது.
இதை தொடர்ந்து இந்திய மாணவர்களை ரஷ்யா வழியாக இந்தியா கொண்டு வர வெளியுறவு துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.