இந்தியாவுக்கான பெல்ஜியம் நாட்டின் தூதர் ஃப்ரான்காயிஸ் டெல்ஹாயெ உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை இந்தியா தெள்ள தெளிவாக கண்டிக்க வேண்டும் என்பதை தனது நாடு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறி உள்ளார்.
ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது மேலும் இந்த போர் இரண்டாம் உலகப்போருக்கு பின் ஐரோப்பாவின் மிக மோசமான அகதிகள் சூழலை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் முக்கியத்துவம் சர்வதேச அரங்கில் இருக்கும் நலமதிப்பு காரணமாக இந்தியா இப்படி கருத்து தெரிவிக்கும் பட்சத்தில் ரஷ்ய அதிபர் புடின் மனம் மாறலாம் என தெரிவித்துள்ளார்.
இந்தியா மேற்குலக நாடுகளுடனும் ரஷ்யா மற்றும் கிழக்கு பகுதி நாடுகளுடனும் மிகவும் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.