பிரம்மாஸ் ஏவுகணை கூட்டு விசாரணை கோரிய பாக்; நிராகரித்த இந்தியா !!

  • Tamil Defense
  • March 14, 2022
  • Comments Off on பிரம்மாஸ் ஏவுகணை கூட்டு விசாரணை கோரிய பாக்; நிராகரித்த இந்தியா !!

சமீபத்தில் தவறுதலாக பாகிஸ்தான் வான் பகுதிக்குள் ஏவப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணை விஷயத்தில் பாகிஸ்தான் கூட்டு விசாரணை கோரியுள்ளது.

ஆனால் இந்தியா பாகிஸ்தான் அரசுடைய அந்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து கூட்டு விசாரணைக்கு அடியோடு நிராகரித்த உள்ளது.

மேலும் ஏற்கனவே உள்ள பல்வேறு விவகாரங்களில் கூட்டு விசாரணை நடத்தப்படாமல் உள்ளது என பாகிஸ்தானை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதாவது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை குறிப்பிட்டு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.