இந்தியாவிடம் 150 முதல் 200 அணு ஆயுதங்களை தயாரிக்கும் திறன் உள்ளது வெளியான ஆய்வு தகவல்!!

  • Tamil Defense
  • March 24, 2022
  • Comments Off on இந்தியாவிடம் 150 முதல் 200 அணு ஆயுதங்களை தயாரிக்கும் திறன் உள்ளது வெளியான ஆய்வு தகவல்!!

சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் SIPRI ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆய்வு முடிவை வெளியிடும்.

இந்த ஆய்வில் உலகளவில் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை மற்றும் அணு ஆயுத தயாரிப்பு திறன்கள் பற்றிய தகவல்கள் அடங்கி இருக்கும்.

அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான ஆய்வு முடிவில் இந்தியாவிடம் தற்போது 156 அணு ஆயுதங்கள் உள்ளதாகவும்

அணுசார் ஆராய்ச்சியாளர்களின் அமைப்பின் தகவலின்படி இந்தியாவால் சுமார் 150 -200 அணு ஆயுதங்கள் வரை தயாரிக்க முடியும் அதற்கான ப்ளூட்டோனியம் உள்ளது என கூறப்படுகிறது.