மலிவான விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்கும் இந்தியா !!
1 min read

மலிவான விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்கும் இந்தியா !!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மலிவான விலையில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த வகையில் சுமார் 3 மில்லியன் பேரல் அளவிலான கச்சா எண்ணெயை மார்ச் மாத தேவைக்காக விடால் எனும் ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளனர்.

விடால் நிறுவனம் ஒரு பேரலுக்கு 20 முதல் 25 டாலர் எனும் தள்ளுபடி விலைக்கு இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை விற்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர அபு தாபியின் முர்பன் நிறுவனத்திடம் இருந்து 2 மில்லியன் பேரல்கள், நைஜீரியாவின் அக்போ மற்றும் ஃபோர்கடாஸ் ஆகியவற்றிடம் இருந்து தலா 1 மில்லியன் பேரல்கள் வீதம் 2 மில்லியன் பேரல்கள்,

கடைசியாக கேமரூன் நாட்டை சேர்ந்த கோலே நிறுவனத்திடம் இருந்து 1 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.