ஏற்கனவே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 3 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய நிலையில்
தற்போது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ரஷ்யாவிடம் இருந்து 2 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் பேசும்போது குறைந்த விலையில் கிடைக்கும் எண்ணெயை நிச்சயமாக இந்தியா வாங்கும் என தெரிவித்தனர்.
ஆகவே நிபுணர்கள் இனி இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான எரிசக்தி சார்ந்த உறவுகள் நன்கு வலுவடையும் என எதிர் பார்க்கின்றனர்.