உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள காரணத்தால் ரஷ்யா மீது உலகளாவிய ரீதியில் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு பல வகையான தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் ரஷ்யா உடன் வர்த்தகம் மேற்கொள்ளும் பல்வேறு நாடுகளுக்கும் இந்த பொருளாதார தடைகள் சிக்கலை ஏற்படுத்தும் இந்தியா அதில் முக்கியமான நாடாகும்.
எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு, 20,000 ஏகே203 துப்பாக்கிகள், 460 டி90 டாங்கிகள், 2 தல்வார் ரக போர்க்கப்பல்கள், பிரம்மாஸ் ஏவுகணைகளின் ஏற்றுமதி ஆகியவை பிரச்சினைகளை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
ஆகவே இதனை சமாளிக்கும் வகையில் இந்தியா இதற்கான பணத்தை அமெரிக்க டாலரில் வழங்காமல் மாறாக இந்திய ரூபாயிலேயே பரிமாற்றம் செய்து கொள்ள முயற்சி செய்து வருகிறது.
இதற்கான முயற்சிகளில் ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.