பேச்சுவார்த்தைக்கு தயார் அது தோல்வியுற்றால் 3ஆம் உலக போர் தான் உக்ரைன் அதிபர் !!

  • Tamil Defense
  • March 21, 2022
  • Comments Off on பேச்சுவார்த்தைக்கு தயார் அது தோல்வியுற்றால் 3ஆம் உலக போர் தான் உக்ரைன் அதிபர் !!

உக்ரைன் அதிபர் வோலோடிமீர் ஸெலன்ஸ்கி ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ஆனால் அது தோல்வியுற்றால் மூன்றாம் உலகப்போருக்கு வித்திடும் என கூறியுள்ளார்.

மேலும் அவர் நாங்கள் தினமும் மக்களை இழந்து கொண்டு இருக்கிறோம் ரஷ்யர்கள் எங்களை மொத்தமாக அழிக்க வந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனை அவர் அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஊடக நிறுவனமான CNN தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.