NO FLY ZONE ஏற்படுத்த முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை !!

உக்ரைன் வான்வெளியை எந்த மூன்றாவது தரப்பும் NO FLY ZONE ஆக அறிவிக்க முயன்றால் அது ரஷ்யாவுடன் போரை விரும்பும் செயலாகவே கருதப்படும் எனவும்,

இதற்கு பதிலடியாக மிக மிக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் நேட்டோ மற்றும் மேற்குலக நாடுகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னர் உக்ரைனிய அதிபர் ஸெலன்ஸ்கி தனது நாட்டின் வான் வெளியை நேட்டோ NO FLY ZONE ஆக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததும்

அதனை நேட்டோ அமைப்பு புறக்கணித்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்த நேட்டோ பச்சை கொடி காட்டியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி விமர்சனம் செய்ததும் குறிபிடத்தக்கது ஆகும்.