60ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி !!
1 min read

60ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி !!

1962ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளியின் 60ஆவது ஆண்டு விழா ஏப்ரல் 2 கொண்டாடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலம் விமானப்படை தளத்தில் உருவாக்கப்பட்டது பின்னர் 1973ஆம் ஆண்டு ஹகிம்பேட் விமானதளத்திற்கு மாற்றப்பட்டது, இடைப்பட்ட காலகட்டத்தில் அலகாபாத் மற்றும் ஜோத்பூர் தளங்களுக்கும் மாற்றப்பட்டு உள்ளது.

இந்த பிரத்யேக விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் சவுதிரி ஆகியோர் ஹகிம்பேட் தளத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.