அடுத்த தலைமுறை ரோந்து கலன்களை கட்டமைக்க உள்ள கோவா கப்பல் கட்டுமான தளம் !!

இந்திய கடற்படைக்கான அடுத்த தலைமுறை ரோந்து கலன்களை கட்டமைக்கும் ஒம்பந்தத்தை கோவா கப்பல் கட்டுமான தளம் பெற்றுள்ளது.

இது தவிர இந்திய கடலோர காவல்படைக்கான எட்டு அதிவேக ரோந்து கலன்களையும் கட்டமைக்கும் ஒப்பந்தத்தை கோவா கப்பல் கட்டுமான தளம் பெற்றுள்ளது விரைவில் இரண்டு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய தகவல்களின் படி மொத்தமாக சுமார் 9000 கோடி ரூபாய் மதிப்பில் 11 அடுத்த தலைமுறை ரோந்து கலன்கள் கட்டப்பட உள்ளர அவற்றில் 7 கோவா கப்பல் கட்டுமான தளத்தால் கட்டப்படும்

மீதமுள்ள நான்கு கலன்களும் வேறு ஏதேனும் இந்திய கப்பல் கட்டுமான தளத்தால் கட்டப்படும் ஆனால் இதுவரை இரண்டாவது தொகுதிக்கான கட்டுமான நிறுவனம் தேர்வு செய்யப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் ஏற்கனவே அம்பானிக்கு சொந்தமான பிபாவாவ் டிஃபன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு பின்னர் கால தாமதம் காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.