இரண்டு டோக்ரா படையணிகளை சிறப்பித்த தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே !!

  • Tamil Defense
  • March 26, 2022
  • Comments Off on இரண்டு டோக்ரா படையணிகளை சிறப்பித்த தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே !!

இந்திய தரைப்படையின் டோக்ரா ரெஜிமென்ட்டின் இரண்டு படையணிகளை இந்திய தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே சிறப்பித்தார்.

20ஆவது டோக்ரா மற்றும் 21ஆவது டோக்ரா பட்டாலியன்களுக்கு உத்தர பிரதேச மாநிலம் ஃபைசாபாத்தில் உள்ள டோக்ரோ ரெஜிமென்ட் மையத்தில் நடைபெற்ற விழாவில் கொடிகள் வழங்கப்பட்டன.

இந்த இரண்டு படையணிகளும் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் மிகவும் சிறப்பாக நாட்டுக்கு சேவையாற்றிய காரணத்தால் இந்திய தரைப்படை இரண்டு படையணிகளையும் கவுரவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சி ராணுவங்களில் பின்பற்றப்படும் பாரம்பரியங்களில் ஒன்றாகும் குடியரசு தலைவர் பிரதமர் அல்லது தளபதிகள் இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கமான ஒன்றாகும்.