பஞ்சாப் மாநிலம் காசா நகரில் எல்லை பாதுகாப்பு படையின் 114ஆவது பட்டாலியன் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது, அட்டாரி வாகா எல்லையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் தான் இந்த படையணி உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணியளவில் இப்படையணியை சேர்ந்த கான்ஸ்டபிள் சேட்டப்பா தீடிரென தனது துப்பாக்கியை எடுத்து மெஸ் ஏரியாவில் தாக்குதல் நடத்தினார்.
இதில் நான்கு வீரர்கள் சரமாரியாக சுடப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் கான்ஸ்டபிள் சேட்டப்பாவும் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து விசாரணை நடத்த எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.