உக்ரைன் சென்ற உலகின் மிகச்சிறந்த ஸ்னைப்பர்களில் ஒருவரான வாலி வீரமரணம் அடைந்ததாக வெளியான தகவல் !!

  • Tamil Defense
  • March 16, 2022
  • Comments Off on உக்ரைன் சென்ற உலகின் மிகச்சிறந்த ஸ்னைப்பர்களில் ஒருவரான வாலி வீரமரணம் அடைந்ததாக வெளியான தகவல் !!

உக்ரைன் நாட்டிற்கு ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட கனடா ராணுவத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற வாலி எனும் புனைப்பெயர் கொண்ட வீரர் விரைந்த கதை தெரிந்ததே.

இந்த நிலையில் இவர் போர் முனைக்கு சென்ற 20ஆவது நிமிடத்திலேயே ரஷ்ய சிறப்பு படையான ஸ்பெட்ஸ்நாஸ் படையின் வீரர்களால் சண்டையில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர் கனேடிய தரைப்படையின் புகழ்பெற்ற 22ஆவது ரெஜிமென்ட்டின் வீரர் ஆவார் இந்த ரெஜிமென்ட் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் உலகின் நீண்டதூர (3.5 கிமீ) ஸ்னைப்பர் தாக்குதலை நடத்திய பெருமைக்கு உரியதாகும்.

வாலி 2009 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே இரண்டு முறை ஆஃப்கானிஸ்தான் நாட்டில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் மேலும் ஒய்வுக்கு பிறகு 2015ஆம் ஆண்டு ஈராக் நாட்டிற்கு ISIS பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட சென்ற அனுபவம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது தனது மனைவி மற்றும் ஒரு இளம் மகனை விட்டுவிட்டு தற்போது உக்ரைனுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது இவர் வீரமரணம் அடைந்தது உண்மையா பொய்யா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.