உக்ரைன் போரில் பங்கு பெறும் முன்னாள் பிரிட்டிஷ் மரைன் கமாண்டோக்கள் !!

  • Tamil Defense
  • March 7, 2022
  • Comments Off on உக்ரைன் போரில் பங்கு பெறும் முன்னாள் பிரிட்டிஷ் மரைன் கமாண்டோக்கள் !!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதை அடுத்து அந்நாட்டு அரசு உலகளாவிய ரீதியில் சண்டையிட வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது வெளியான தகவலின்படி பிரிட்டிஷ் ராயல் மரைன் கமாண்டோ படையை சேர்ந்த வீரர்கள் உக்ரைனுக்கு சென்றுள்ளனர்.

சுமார் 100 ஒய்வு பெற்ற வீரர்கள் தற்போது க்யிவ் நகரில் உள்ளதாகவும் விரைவில் ரஷ்ய படைகளுடனான மோதலில் பங்கெடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.