1 min read
உக்ரைனில் வீரமரணம் அடைந்த 3 முன்னாள் பிரிட்டிஷ் சிறப்பு படை வீரர்கள் !!
உக்ரைனில் நடைபெற்று வரும் சண்டையில் மூன்று முன்னாள் பிரிட்டிஷ் சிறப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலந்து நாட்டின் எல்லையில் இருந்து 6 மைல்கள் தொலைவில் உள்ள யாவோரிவ் படைதளத்தில் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
உக்ரைனுக்கு சண்டையிட சென்றுள்ள வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த இந்த தளத்தின் மீது ரஷ்யா சுமார் 30 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மோதி தாக்கின.
இதில் நூற்றுக்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக கருதப்படும் நிலையில் மூன்று பிரிட்டிஷ் சிறப்பு படையினர் பற்றிய தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.