
நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ள கார்னர்ஷாட் ரக துப்பாக்கி படையில் இணைக்க தயார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒரு பிரிவான ARDE இந்த ஆயுதத்தை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரித்துள்ளது.
இந்த ஆயுதத்தின் தொழில்நுட்பத்தை தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் BEL மற்றும் ஸென் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்களுக்கு தயாரிப்பு பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இந்த ஆயுதத்தை ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல்படை ஆகியவை விரைவில் படையில் இணைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.