45 நாட்களில் DRDO கட்டி முடித்த 7 நிலைகள் கொண்ட ஆம்கா ஆய்வு மையம் !!
1 min read

45 நாட்களில் DRDO கட்டி முடித்த 7 நிலைகள் கொண்ட ஆம்கா ஆய்வு மையம் !!

பெங்களூர் நகரில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது வானூர்தி மேம்பாட்டு முகமைக்காக ஒரு கட்டிடத்தை 45 நாட்களில் கட்டி முடித்துள்ளது.

7 நிலைகள் கொண்ட இந்த கட்டிடத்தின் ஒட்டுமொத்த பரப்பளவு சுமார் 1.3 லட்சம் சதுர அடிகள் ஆகும் ஏற்கனவே உள்ள வானூர்தி மேம்பாட்டு முகமை வளாகத்தில் இது அமைந்துள்ளது.

இந்த கட்டிடத்தில் ஐந்தாம் தலைமுறை ஆம்கா போர் விமானத்திற்கான பறத்தல் கட்டுபாட்டு அமைப்பு மற்றும் ஏவியானிக்ஸ் ஆகியவை உருவாக்கப்பட உள்ளன.

இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் உருவாக்க மத்திய அரசு வானூர்தி மேம்பாட்டு முகமைக்கு சுமார் 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.