அமெரிக்க விமானத்தில் சீன கொடியை வரைந்து ரஷ்யா மீது குண்டுவீச வேண்டும் !!

  • Tamil Defense
  • March 7, 2022
  • Comments Off on அமெரிக்க விமானத்தில் சீன கொடியை வரைந்து ரஷ்யா மீது குண்டுவீச வேண்டும் !!

முன்னாள் அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் அவரது குடியரசு கட்சிக்கு அதிகளவில் நிதி வழங்குவோர் இடையே சமீபத்தில் பேசினார்.

அப்போது அவர் அமெரிக்காவின் எஃப்-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தில் சீன கொடியை வரைந்து ரஷ்யா மீது குண்டுவீசி தாக்குதல் நடத்த வேண்டும் என பேசியுள்ளார்.

பின்னர் அந்த பழியை சீனா மீது போட்டு விடலாம் இதனால் ரஷ்யா மற்றும் சீனா இடையே மோதல் நடைபெறும் நாம் வேடிக்கை பார்க்கலாம் என கூறியுள்ளார்.

அவர் ரஷ்ய உக்ரைன் விவகாரம் குறித்து இப்படி காமெடியாக பேசி சிரிப்பலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.