உக்ரைன் விவகாரம் இந்தியா என்ன செய்ய வேண்டும் என யாரும் நிர்பந்திக்க கூடாது ஃபிரான்ஸ் !!

  • Tamil Defense
  • March 4, 2022
  • Comments Off on உக்ரைன் விவகாரம் இந்தியா என்ன செய்ய வேண்டும் என யாரும் நிர்பந்திக்க கூடாது ஃபிரான்ஸ் !!

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என யாரும் நிர்பந்திக்க கூடாது இந்தியாவின் குரல் சர்வதேச அளவில் முக்கியமானது என ஃபிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார்.

விரைவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஃபிரான்ஸ் கொண்டு வர உள்ள மனிதாபிமான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்.

ஆனால் இந்தியா தனது நலன்கள் மற்றும் கொள்கைகள் அடிப்படையில் காலம் காலமாக முடிவெடுத்து வரும் நாடு அதனையும் நாங்கள் ஏற்று கொள்கிறோம் என்றார்.

தலைநகர் தில்லியில் ஊடகங்களை ஃபிரான்ஸ் தூதர் எம்மானுவேல் லெனெய்ன் சந்தித்து பேசிய போது தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.