உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட செல்ல வேண்டாம் என அறிவிக்கை வெளியிட்ட ஜெர்மனி உள்ளிட்ட 7 நாடுகள் !!

ஜெர்மனி ஃபிரான்ஸ் இத்தாலி பெல்ஜியம் லக்சம்பர்க் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஏழு ஐரோப்பிய நாடுகள் தங்களது நாட்டு குடிமக்களுக்கு முக்கிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

அதாவது தங்கள் நாட்டு குடிமக்கள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக ஒரு ஐரோப்பிய நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

ஃபிரான்ஸ் உள்துறை அமைச்சரான ஜெரால்டு ஆர்மீனின் நிச்சயமாக எங்கள் குடிமக்கள் போர் களத்திற்கு செல்வதை நாங்கள் விரும்பவில்லை என அதே நாளேட்டிற்கு பேட்டி அளிக்கும் போது கூறியுள்ளார்.

சில நாட்கள் முன்னர் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் ஆஸ்திரேலிய மக்கள் உக்ரைன் சண்டையில் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.