இந்திய விமானப்படையின் துணை தளபதி ஏர் வைஸ் மார்ஷல் சந்தீப் சிங் புவிசார் அரசியல் சூழல் கடினமாக தான் உள்ளது ஆனாலும் இந்திய ரஷ்ய உறவு தொடரும் என்றார்.
மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் விதித்துள்ள தடைகளால் இந்திய விமானப்படைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும்
தற்போது முன்று சி-17 விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும் கடைசி இந்தியர் மீட்கப்படும் வரை விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் அவர் கூறினார்.