எல்லையோரம் நிறுவப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பம் கொண்ட விளக்குகள் !!

பாகிஸ்தான் மற்றும் சீனா உடனான எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில் சுதேசி தொழில்நுட்பம் கொண்ட மின்விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த LED விளக்குகளில் லென்ஸ் இணைக்கப்பட்டுள்ளது இதனால் வெளிச்சம் அதிக தூரம் செல்லும் மேலும் 360 டிகிரி கோணத்தில் சுழலும் திறன் கொண்டது.

இத்தகைய நான்காயிரம் விளக்குகள் பஞ்சாப் குஜராத் லடாக் அருணாச்சல பிரதேசம் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லைகளில் நிறுவப்பட்டுள்ளன.

1 கிலோமீட்டர் தொலைவு வரை வெளிச்சத்தை வீசும் இந்த விளக்குகளை உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை தளமாக கொண்டு இயங்கும் கார்பெட் லைட்ஸ் எனும் நிறுவனம் வடிவமைத்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.