கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்ட பாதுகாப்பு கண்காட்சி 2022 !!

குஜராத் மாநிலம் காந்திநகரில் இந்த வருடம் நடைபெற இருந்த பாதுகாப்பு கண்காட்சி கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகி உள்ளது.

மார்ச் 10 முதல் 14 வரை இந்தியா அமெரிக்கா இங்கிலாந்து ரஷ்யா உக்ரைன் உட்பட சுமார் 55 நாடுகளில் இருந்து 1000 நிறுவனங்கள் கலந்து கொள்ள இருந்தன.

இதில் பங்கேற்கும் நிறுவனங்கள் தங்களது பொருட்களை கொண்டு வந்து காட்சிபடுத்துவதில் சில சிக்கல்கள் நிலவுவதால் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தி நிகழ்விற்கு தயாரான பல்வேறு நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் பாதுகாப்பு துறை இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.