தன்னிச்சையான ஆயுத சோதனை மற்றும் தர நிர்ணய அமைப்பை உருவாக்கும் இந்தியா !!

  • Tamil Defense
  • March 10, 2022
  • Comments Off on தன்னிச்சையான ஆயுத சோதனை மற்றும் தர நிர்ணய அமைப்பை உருவாக்கும் இந்தியா !!

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒரு தன்னிச்சையான ஆயுத சோதனை மற்றும் தர சான்றிதழ் அமைப்பை உருவாக்க முடிவெடுத்து உள்ளது.

இந்தியாவின் தனியார் நிறுவனங்களுடைய ஆயுதங்களை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் இந்த அமைப்பு சோதனை செய்து தர நிர்ணய சான்றிதழ் வழங்கும் இதன்மூலம் சுதேசி தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

இதுவரை தனியார் நிறுவனங்கள் தங்களது ஆயுதங்களை சோதனை செய்ய அதிகாரமிக்க பாரபட்சம் காட்டும் செயல்திறன் குன்றிய பொதுத்துறை நிறுவனங்களையே சார்ந்திருக்கு வேண்டிய மோசமான நிலை நிலவி வந்தது.

இந்த வருட பாதுகாப்பு பட்ஜெட்டில் 68 % உள்நாட்டு தளவாடங்கள் வாங்க ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு மற்றுமொரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.