15 சுதேசி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்க அனுமதி !!

பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 15 இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க அனுமதி வழங்கியுள்ளது.

சுமார் 3,887 கோடி ரூபாய் மதிப்பில் இந்த 15 ஹெலிகாப்டர்களும் வாங்கப்பட உள்ளன, அவற்றில் 10 இந்திய விமானப்படைக்கும் 5 இந்திய தரைப்படைக்கும் வழங்கப்பட உள்ளன.

இவற்றிற்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் சேர்த்து சுமார் 377 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க தகவல் ஆகும்.

தற்போது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் தயாரித்த இந்த ஹெலிகாப்டர்களில் 45% உள்நாட்டு பாகங்கள் உள்ளன அதனை 55% ஆக அதிகரிக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் ஆர்டர் சிறியதாக இருந்தாலும் முறையானதாக நல்ல ஆரம்பமாக உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.