இந்திய நிறுவனம் உருவாக்கும் உலகின் முதல் ஸ்வார்ம் ட்ரோன் எதிர்ப்பு மைக்ரோ ஏவுகணை !!

  • Tamil Defense
  • March 24, 2022
  • Comments Off on இந்திய நிறுவனம் உருவாக்கும் உலகின் முதல் ஸ்வார்ம் ட்ரோன் எதிர்ப்பு மைக்ரோ ஏவுகணை !!

இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனமான சோலார் இன்டஸ்ட்ரீஸ் ஒரு புதிய மைக்ரோ ஏவுகணை ஒன்றை உருவாக்கி வருகிறது.

2 கிலோ எடை கொண்ட இந்த மைக்ரோ ஏவுகணை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து குழுவாக வரும் SWARM DRONEகளை தாக்கி அழிக்கும் திறனை கொண்டிருக்கும்.

இது உலகின் முதல் SWARM DRONE எதிர்ப்பு ஏவுகணையாகும், 24/36/48 என மூன்று வெவ்வேறு விதமான எண்ணிக்கையில் இந்த ஏவுகணைகளை ஏவும் லாஞ்சர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்த புதிய ஏவுகணையின் பெயர் COUNTER DRONE MICRO MISSILE (CDM-1) என்பது கூடுதல் தகவல் ஆகும்.