தில்லி அரசின் ராணுவ பள்ளி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு !!

  • Tamil Defense
  • March 23, 2022
  • Comments Off on தில்லி அரசின் ராணுவ பள்ளி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு !!

நாட்டின் தலைநகரான புதுதில்லி அமைந்துள்ள தில்லி மாநிலத்தின் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பு பலரை கவர்ந்துள்ளது.

அதாவது ஜரோடா கலான் பகுதியில் மாணவ மாணவிகளை இந்திய முப்படைகளுக்கு தயார்படுத்தும் பள்ளி ஒன்றை தில்லி அரசு கட்டி வருவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இப்பள்ளியில் பயில கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை எனவும் மாணவ மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதிகளும் அமைத்து கொடுக்கப்படும் எனவும் கூறினார்.

ஒவ்வொரு வருடமும் தலா 100 மாணவ மாணவிகள் ஒன்பது மற்றும் பதினொறாம் வகுப்பில் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் தில்லியில் வசிக்கும் எந்த மாணவ மாணவியும் இங்கு படிக்க விண்ணபிக்கலாம் அந்த வகையில் இதுவரை சுமார் 18000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.