ரஷ்ய ராணுவ வாகனங்களின் தடுமாற்றத்திற்கு சீன டயர்கள் காரணமா ??

  • Tamil Defense
  • March 7, 2022
  • Comments Off on ரஷ்ய ராணுவ வாகனங்களின் தடுமாற்றத்திற்கு சீன டயர்கள் காரணமா ??

சில நாட்களுக்கு முன்னர் உக்ரைன் தலைநகர் க்யிவை நோக்கி மிகப்பெரிய ரஷ்ய ராணுவ கான்வாய் ஒன்று நகர்வதாக பார்த்தோம் ஆனால் அந்த கான்வாய் இன்னும் தலைநகரை எட்டவில்லை.

இதற்கு காரணமாக ஆங்காங்கே உக்ரைனிய தாக்குதல், பராமரிப்பு, எரிபொருள் தட்டுபாடு போன்ற காரணங்கள் பல்வேறு ராணுவ பார்வையாளர்கள் மற்றும் நிபுணர்களால் முன்வைக்கப்படுகிறது.

இதில் சுவாரஸ்யமான மற்றொரு காரணம் என்னவென்றால் ரஷ்ய ராணுவ வாகனங்களில் பயன்படுத்தி வரப்படும் மலிவான சீன தயாரிப்பு டயர்கள் என்பதாகும்.

Yellow sea YS20 எனப்படும் அந்த சீன தயாரிப்பு மலிவுவிலை டயர்கள் மிஷெலின் XYZ உயர் ரக ராணுவ தர டயர்களின் மலிவு விலை காப்பி என நிபுணர்கள் கூறுகின்றனர் தற்போது ரஷ்ய ராணுவம் இத்தகைய டயர்களை தான் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறது.

சோவியத் ஒன்றிய காலகட்ட சோவியத் தயாரிப்பு டயர்கள் கூட இவற்றை விட வலுவானதாக இருந்ததாக கூறப்படும் நிலையில் இந்த சீன டயர்கள் அதிகம் உழைக்காமல் விரைவிலேயே சேதமடையும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாட்கள் சூரிய ஒளியில் பட்டால் இந்த டயர்கள் தங்களது வெளிப்பகுதியின் கடினத்தன்மையை முற்றிலும் இழந்து விடுகின்றன இதன் காரணமாக சகதியிலோ அல்லது சாலைகளற்ற பாதையில் செல்லும் போதோ டயர்கள் உடைந்து விடுகின்றன.

இதனால் வாகனங்கள் முன்னேற முடியாமல் அங்கேயே சிக்கி கொள்கின்றன அந்தளவுக்கு சீன ராணுவ டயர்களின் தரம் மோசமாக உள்ளதாக ராணுவ நிபுணர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.