நேருக்கு நேர் சந்தித்து கொண்ட அமெரிக்க சீன 5ஆம் தலைமுறை போர் விமானங்கள் !!
1 min read

நேருக்கு நேர் சந்தித்து கொண்ட அமெரிக்க சீன 5ஆம் தலைமுறை போர் விமானங்கள் !!

கிழக்கு சீன கடல்பகுதியில் சீனாவின் செங்டு ஜே-20 மற்றும் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35 ஆகிய ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் நேருக்கு நேராக சந்தித்து உள்ளன.

அமெரிக்க விமானப்படையின் பசிஃபிக் பிராந்திய தளபதி ஜெனரல் கென்னத் வில்ஷ்பேக் இந்த தகவலை உறுதிபடுத்தியதோடு மட்டுமின்றி ஒன்றுக்கும் அதிகமான முறை இது நடைபெற்றதை சூசகமாக தெரிவித்தார்.

சீன ஜே-20 விமானங்கள் கேஜே-500 ஏவாக்ஸ் விமானத்துடன் பறந்து கொண்டிருந்ததாகவும் அவர்களின் கட்டளை மற்றும் கட்டுபாடு நல்ல முறையில் இருந்ததாகவும்

சீனர்கள் ஜே-20 போர் விமானங்களை அருமையாக இயக்குவதை உணர முடிந்ததாகவும் ஆனால் அதனுடைய முழு திறன்கள் அதனை எப்படியெல்லாம் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்பதை அறிய காத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும் ஜே-20 விமானம் பயன்படுத்தும் வானிலக்கு ஏவுகணையான பிஎல்-15ல் ஏசா ரேடார் உள்ளது மேலும் இதனுடைய தாக்குதல் வரம்பானது 200 முதல் 300 கிலோமீட்டர் தொலைவு வரை இருக்கும் இத்தகைய ஏவுகணைகள் தற்போது அமெரிக்காவிடம் இல்லை என கூறியதும் குறிப்பிடத்தக்கது.