சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு !!

  • Tamil Defense
  • March 27, 2022
  • Comments Off on சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு !!

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தனது ஆஃப்கானிஸ்தான் சுற்றுபயணத்தை முடித்த கையோடு இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வந்துள்ளார்.

அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கரை சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்களை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சினை, பாகிஸ்தான் உடனான உறவுகள், ஆஃப்கானிஸ்தான் மற்றும் பயங்கரவாதம் ஆகியவை முக்கிய இடம் பிடித்தது.

மேலும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் பேசும்போது இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் எல்லையில் நிலவும் சூழலை பொறுத்து மாறுபடும் என கூறியுள்ளார்.