
சீன கடற்படைக்கு சொந்தமான Y8 ரக கடல்சார் ரோந்து மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு/வேட்டை விமானம் தென்சீன கடல் பகுதியில் மோதி விபத்தை சந்தித்து உள்ளது.
இந்த தகவலை தைவான் நாட்டின் உளவுத்துறையான தேசிய பாதுகாப்பு முகமையின் தலைவர் சென் மிங் டாங் உறுதிப்படுத்தி வெளியிட்டுள்ளார்.
மேலும் இதனை மறைத்து தேடுவதற்கு தோதாக விபத்துக்குள்ளான பகுதியில் கடற்படை போர் பயிற்சி என்ற பெயரில் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.