சீனாவின் அதிவேக அணு ஆயுத புல்லட் ரயில் திட்டம் !!

  • Tamil Defense
  • March 31, 2022
  • Comments Off on சீனாவின் அதிவேக அணு ஆயுத புல்லட் ரயில் திட்டம் !!

சீன அரசு தனது நாட்டின் பாதுகாப்பு திறன்களை அதிகரிக்கும் விதமாக அதிகவேக அணு ஆயுத புல்லட் ரயில்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது அதிவேக புல்லட் ரயில்கள் மூலமாக அணு ஆயுத கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தேவையான இடத்திற்கு நகர்த்தி தேவைப்படும் போது எதிரி இலக்குகள் மீது ஏவ முடியும்.

முன்னதாக வழக்கமான ரயில் பாதைகளில் தளர்வான அடிப்பகுதி ஜல்லிகள் இத்தகைய ஏவுகணைகளின் அதித உந்துசக்தி சுமார் 8மீட்டர் ஆழம் வரை ஏற்படுத்தும் நாசம் காரணமாக ஏவ முடியாது என கருதப்பட்ட நிலையில்,

தற்போது புல்லட் ரெயில் பாதைகள் கான்கிரீட் மீது போடப்பட்டுள்ள காரணத்தால் எவ்வித சிக்கலுமின்றி இத்தகைய ஏவுகணைகளை ஏவ முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளதையடுத்து இந்த திட்டம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.