உக்ரைன் ரஷ்யா இடையே சமாதானம் செய்து வைக்க தயார் சீனா அறிவிப்பு !!

சீனாவின் வெளியுறவு அமைச்சரான வாங் யி ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான பிரச்சினையில் தலையிட்டு சமாதானம் செய்து வைக்க சீனா தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

வருடாந்திர ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்கள் இடையே பேசிய அவர் சர்வதேச சமுகத்துடன் இணைந்து தேவைப்படும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் சீனா கடந்த மாதம் இறுதியில் ரஷ்யாவை கண்டிக்க மறுத்ததும் இரண்டு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு வான் தான் எல்லை எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.