இந்திய நாட்டின் சேவையில் 60 ஆண்டுகளை தொடும் சேட்டக் !!
1 min read

இந்திய நாட்டின் சேவையில் 60 ஆண்டுகளை தொடும் சேட்டக் !!

சேத்தக் ஹெலிகாப்டர்கள் இந்திய நாட்டின் சேவையில் சுமார் 60 ஆண்டுகளை அடுத்த மாதம் தொட உள்ளன.

இதற்கான விழாவை செகந்திராபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை விமரிசையாக ஏப்ரல் 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் கொண்டாட உள்ளது.

கடந்த 1962ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டிடம் இருந்து ஆலூட்-3 எனும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன, இதனை பின்னர் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சேட்டக் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.

இந்த சேட்டக் ஹெலிகாப்டர்கள் இரண்டு டன் எடை கொண்டவை ஆகும் 500 கிலோமீட்டர் தொலைவு வரை பயணிக்கும் திறன் கொண்டவையாகும், ஏழு பேர் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.