ரஷ்யா மீது தடை விதிக்க மறுத்த செர்பியா ஒருநாளும் ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என அறிவிப்பு !!

செர்பியா ரஷ்யா மீது தடைகளை விதிக்காது எனவும் ஒரு நாளும் ரஷ்ய எதிர்ப்பு நிலைபாட்டை எடுக்க போவதில்லை என செர்பியா அறிவித்துள்ளது.

இதனை செர்பியா நாட்டின் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் வூலின் தெரிவித்தார் அப்போது அவர் மேற்குலக நாடுகளின் ரஷ்ய எதிர்ப்பு முயற்சிகளை செர்பியா ஆதரிக்காது எனவும் கூறினார்.

ரஷ்யாவின் சொத்துக்களையோ ரஷ்ய மக்களின் சொத்துக்களையோ ஒரு நாளும் முடக்கவோ திருடவோ மாட்டோம் எனவும் ரஷ்ய ஊடகங்களை தடை செய்ய மாட்டோம் எனவும் கூறியுள்ளார்.

செர்பியா உக்ரைன் மீதான படையெடுப்பை கண்டித்துள்ள அதே நேரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான தீவிரமான நடவடிக்கைகளை அனுமதிக்கவில்லை

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பும் செர்பியா நேட்டோ அமைப்பில் ஒரு நாளும் இணையாது என அந்நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் வூசிக் தெரிவித்துள்ளார்.