ரஷ்யாவிடம் அணுசார் நீர்மூழ்கிகளை கட்ட உதவி கோரிய பிரேசில் !!

  • Tamil Defense
  • March 19, 2022
  • Comments Off on ரஷ்யாவிடம் அணுசார் நீர்மூழ்கிகளை கட்ட உதவி கோரிய பிரேசில் !!

பிரேசில் அதிபர் ஜேயர் போல்ஸனேரோ ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை கடந்த மாதம் ரஷ்ய சுற்றுபயணத்தில் மாஸ்கோவில் வைத்து சந்தித்து பேசினார்.

அப்போது அந்நாடு ஃபிரான்ஸ் உதவியுடன் கட்டி வரும் அணுசார் தாக்குதல் நீர்மூழ்கி கப்பலில் பயன்படுத்த தேவையான எரிபொருளை இறுதி செய்ய ரஷ்யாவிடம் உதவி கோரியுள்ளார்.

முதலில் அமெரிக்காவிடம் பிரேசில் இதற்கான உதவி கோரிய நிலையில் அதை அமெரிக்கா புறக்கணித்தது இதன் பிறகே ரஷ்யா பக்கம் பிரேசில் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் நீர்மூழ்கிகளை தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் கட்ட உதவிய ஃபிரான்ஸிடம் பிரேசில் உதவி கோராத காரணம் என்ன என்பது தெரியவில்லை.