இந்தியா வெற்றிகரமாக சோதித்த தொலைதூர பிரம்மாஸ் ஏவுகணை !!

நேற்று முன்தினம் இந்தியா அந்தமான் தீவில் இருந்து மேம்படுத்தப்பட்ட தொலைதூர பிரம்மாஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகள் இந்த புதிய மேம்படுத்தப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணையானது தனது இலக்கை மிகவும் துல்லியமாக தாக்கி அழித்ததாக தகவல் தெரிவித்தனர்.

சமீபத்தில் பாகிஸ்தானுக்குள் தவறுதலாக பிரம்மாஸ் ஏவுகணை ஏவப்பட்ட பிறகு நடைபெறும் இந்தியாவின் முதல் ஏவுகணை சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.