இந்தியா முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரித்த அர்ஜுன் மார்க்1ஏ/2 ரக டாங்கியின் மீது பஹ்ரைன் அதீத ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் தற்போது பஹ்ரைன் அரசு இந்திய அரசை அணுகி அர்ஜூன் மார்க்-1ஏ/2 டாங்கிகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இரண்டு தரப்பினரும் இதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளனர் தற்போது பஹ்ரைன் 180 அமெரிக்க ஏப்ராம்ஸ் டாங்கிகளை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அர்ஜுன் மார்க்-1ஏ/2 ரக டாங்கிகள் முந்தைய மார்க்-1 டாங்கிகளின் மேம்படுத்தப்பட்ட வடிவம் ஆகும் 80க்கும் அதிகமான தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தார் பாலைவன பகுதிகளில் அர்ஜுன் டாங்கிகள் ரஷ்யாவின் டி90 டாங்கிகளை விடவும் சிறப்பாக செயல்பட்டுள்ளன,
அந்த வகையில் பாலைவன நாடான பஹ்ரைன் இந்த டாங்கிகளை தேர்வு செய்தால் எந்த இயங்கும் திறன் சார்ந்த பிரச்சினைகளும் எழாது என கூறலாம்.
பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளை தவிர்த்து FSAPDS, HESH, PCB, TB, LAHAT போன்ற குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை இந்த டாங்கி சுடும் என்பதும் 500 கிலோமீட்டர் இயக்க வரம்பு கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.