
ஜம்மு காஷ்மீர் காவல்துறை அமெரிக்க துப்பாக்கி தயாரிப்பு நிறுவனமான SIG SAUER இடம் இருந்து துப்பாக்கிகளை வாங்க முயன்று வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் தரைப்படை வாங்கிய SIG716 சண்டை துப்பாக்கிகள் மற்றும் SIG SAUER MPX கைதுப்பாக்கிகளை வாங்க உள்ளது.
இது தவிர சுமார் 50 கவச வாகனங்களை வாங்கும் திட்டமும் புலனாய்வு அறிவியல் திறன்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
சற்று நாட்கள் முன்னர் தான் ஜம்மு காஷ்மீர் காவல்துறை சுமார் 8000 குண்டு துளைக்கா கவச உடைகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.