
அடுத்த மாதம் வாக்கில் அஸர்பெய்ஜான் அர்மீனியா மீது படையெடுக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஸர்பெய்ஜான் ஆக்கிரமித்துள்ள நகார்னோ கராபக் பகுதியில் பெருமளவில் படைகளை குவித்துள்ளதன் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அஸர்பெய்ஜான் படைகளுக்கு ஆதரவாக துருக்கி மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளும் களம் இறங்கலாம் என கூறப்படுகிறது.