தகவலறியும் சட்டத்தில் இருந்து விலக்கு கோரும் முப்படைகள் !!

  • Tamil Defense
  • March 5, 2022
  • Comments Off on தகவலறியும் சட்டத்தில் இருந்து விலக்கு கோரும் முப்படைகள் !!

இந்தியாவின் முப்படைகளும் தகவலறியும் உரிமை சட்டத்தில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்குமாறு செயலர்கள் கமிட்டியிடம் முறையிட்டுள்ளன.

உள்துறை பாதுகாப்பு துறை வருவாய்த்துறை கேபினட் செயலர் ஆகியோர் அடங்கிய கமிட்டியிடம் தற்போது இந்த முறையீடு சமர்ப்பிக்க பட்டுள்ள நிலையில் அவர்கள் பரிசீலனை செய்து வருகின்றனர்.

போர் காலத்திலும் அமைதி காலத்திலும் நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் படைகளை இந்த சட்டத்திற்குள்ளாக்கும் செயல்பாடு நாட்டின் பாதுகாப்பிற்கே ஆபத்து விளைவிக்கும் எனவும் கூறியுள்ளன.

நாட்டின் முதலாவது கூட்டு படை தலைமை தளபதியான ஜெனரல் பிபின் ராவத் உயிரோடு இருந்த காலகட்டத்திலேயே இதற்கான நடவடிக்கைகளை அவர் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.