அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங் இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஆவார் இவர் விரைவில் இந்தியா வர உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் எலிசபெத் ட்ரஸ் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் ஆகியோர் இந்தியா வரும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த தலீப் சிங் தான் உக்ரைன் படையெடுப்புக்கு பிறகு ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடைகளுக்கு முக்கிய காரணகர்த்தா என தகவல்கள் தெரிவிக்கின்றன
சமீபத்தில் கூட அவர் செய்தியாளர் சந்திப்பில் உக்ரைன் போர் நிறுத்தப்படும் வரை சர்வதேச சமுகம் ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது.