பிரிட்டிஷ் தரைப்படையின் சிறப்பு படையான SASஐ சேர்ந்த 70 வீரர்கள் மற்றும் அமெரிக்க கடற்படை சிறப்பு படையான SEALSஐ சேர்ந்த 150 வீரர்களும் ஒரு அசாத்தியமான நடவடிக்கையை மேற்கொள்ள பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸின் எல்லையோர நாடான லித்துவேனியாவில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் இவர்கள் உக்ரைனுடைய சிறப்பு படை வீரர்களுடன் இணைந்து உக்ரைன் அதிபரை மீட்க பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என கூறப்படுகிறது.
ஏற்கனவே மூன்று முறை அவர் மீது கொலை முயற்சி நடைபெற்ற நிலையில் நாட்டை விட்டு செல்ல மறுத்து அங்கேயே இருக்கும் பட்சத்தில் உதவி கோரினால் மட்டுமே அவரை மீட்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
செச்சென் சிறப்பு படையினர், ரஷ்யாவின் ஸ்பெட்ஸ்நாஸ் சிறப்பு படையினர் மற்றும் ரஷ்யாவின் தனியார் ராணுவ நிறுவனமான வாக்னர் படையினர் உக்ரைன் அதிபரை தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுவது கூடுதல் தகவல் ஆகும்.