ரஷ்ய யூரேனியத்திற்கு தடை விதிக்காத அமெரிக்கா !!

  • Tamil Defense
  • March 10, 2022
  • Comments Off on ரஷ்ய யூரேனியத்திற்கு தடை விதிக்காத அமெரிக்கா !!

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யூரேனியத்திற்கு மட்டும் தடை விதிக்காமல் அமெரிக்க அரசானது விலக்கு அளித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள அணு உலைகளுக்கான எரிபொருளான யூரேனியம் ரஷ்யாவில் இருந்து தான் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே பெரும்பாலும் அணு சக்தி சார்ந்த மின்சார உற்பத்தியை நம்பியிருக்கும் அமெரிக்கா ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யூரேனியத்திற்கு விலக்கு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அமெரிக்கா தனக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 3% அளவிலான கச்சா எண்ணெய்க்கு மட்டும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.