சீனா உடன் மோதலை விரும்பவில்லை, தைவானின் சுதந்திரத்தை அமெரிக்கா ஆதரிக்காது பைடன் !!

இன்று அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வீடியோ கான்ஃபரஸிங் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன் அமெரிக்கா சீனா உடனான பனிப்போரை விரும்பவில்லை எனவும் தைவானின் சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை எனவும்

அதே போல சீனாவை குறிவைத்து எந்த கூட்டணியையும் அமெரிக்கா உருவாக்கவில்லை மேலும் சீனா உடனான மோதலையும் அமெரிக்கா விரும்பவில்லை என கூறியுள்ளார்.

இரண்டு அதிபர்களும் தங்களது அதிகாரிகளுக்கு இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளை சீர்படுத்தி பழைய நிலைக்கு திருப்ப உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.