பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பேட்ரியாட் அமைப்புகளை களமிறக்கும் அமெரிக்கா !!

  • Tamil Defense
  • March 11, 2022
  • Comments Off on பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பேட்ரியாட் அமைப்புகளை களமிறக்கும் அமெரிக்கா !!

அமெரிக்கா தனது பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை போலந்து நாட்டிலும் ஸ்லவாக்கியாவில் ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து நாடுகள் தங்களது பேட்ரியாட் அமைப்புகளை களமிறக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் போலந்து நாட்டில் அமெரிக்காவின் இரண்டு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுவ உள்ளதாகவும்

இதற்கான உத்தரவுகளை அமெரிக்காவின் ஐரோப்பிய மத்திய கட்டளையக தளபதி ஜெனரல் டாட் வால்டர்ஸ் பிறப்பித்து உள்ளதாகவும் அமெரிக்காவின் ஆஃப்பிரிக்க ஐரோப்பா ராணுவத்தின் அமைப்புகள் போலந்துக்கு மாற்றப்படும் எனவும் கூறப்படுகிறது.

நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சகமும் தனது பேட்ரியாட் அமைப்புகளை சுமார் 200 வீரர்களுடன் ஸ்லவாக்கியா நாட்டிற்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது இதனை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கஜ்ஸா ஒல்லோங்ரேன் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஜெர்மனியும் தனது பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அந்நாட்டின் சொந்த தயாரிப்பான ஒஸிலாட் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஸ்லவாக்கியாவில் களமிறக்க உள்ளதாக அந்நாட்டின் கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் எபர்ஹார்ட் ஸார்ன் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் அனைத்துமே நேட்டோவின் கிழக்கு பகுதியின் குறிப்பாக வான் வெளியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயல்பாடாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.